தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்குவால் பாதிப்பு - பொது சுகாதாரத் துறை தகவல்!

Tamil nadu
By Jiyath Oct 08, 2023 11:28 AM GMT
Report

தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை தெரிவிதித்துள்ளது.

டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு பிறகு, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில், கொசுக்களால் பரவும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்குவால் பாதிப்பு - பொது சுகாதாரத் துறை தகவல்! | 273 People Affected By Dengue Fever Last 8 Days

நடப்பாண்டில், ஜனவரி மாதம் - 866 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிப்ரவரி - 641, மார்ச் - 512, ஏப்ரல் - 302, மே - 271, ஜூன் - 364, ஜூலை - 353, ஆகஸ்டு - 535, செப்டம்பர் - 730 ஆகியோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தமாதம் அக்டோபர் தொடங்கி 8 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்த 8 நாட்களில் மட்டும் 273 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 4800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாளொன்றுக்கு 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்குவால் பாதிப்பு - பொது சுகாதாரத் துறை தகவல்! | 273 People Affected By Dengue Fever Last 8 Days

தற்போது 503 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அடுத்த 3 மாதங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ல் பாதிப்பு 6430 – உயிரிழப்பு 8. நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4800 - உயிரிழப்பு 4 ஆகவும் பதிவாகி உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.