27 விமான நிலையங்கள் மூடல்; அதுவும் மே 10 வரை - எதெல்லாம்னு அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இந்தியா முழுவதும் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போர் பதற்றம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
விமானங்கள் ரத்து
மொத்தம் 9 தீவிரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 244 இடங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், லே, அமிர்தரஸ், சண்டிகர் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்சாலா போன்ற விமான நிலையங்களிலும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் வழியாகச் செல்லும் 7 சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளன.