ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 250 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போகுக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் அறிவித்துள்ளது.
250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இது குறித்து விழுப்புரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பொதுமக்களின் வசதிக்காக ஆகஸ்ட் 11, 12-ல் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ஆக.15ல் (செவ்வாய்க்கிழமை) 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதை கண்காணிக்க அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.