படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?' : 90ஸ் கிட்ஸ் காவியம் சூர்யவம்சம்

By Irumporai Jun 27, 2022 01:55 PM GMT
Report

சூர்ய வம்சம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்து குறிப்பாக 90 ஸ் கிட்ஸ் மத்தியல் நாஸ்டால்ஜியாக நினைவில் இருக்கும் படம் சூர்ய வம்சம் .

காலம் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது பார்த்தீர்களா

 விக்ரமனின் 'சூர்யவம்சம்' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1997-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படத்தை இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க செய்வோம். 

படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது இந்த ஒரே பாடலில் பணக்காரராக சரத்குமார் முன்னேறும் காட்சியை பார்த்து அன்று சிலிர்த்துவிட்டு சில்லறையை சிதறவிட்டவர்கள் தான் 90 ஸ் கிட்ஸ் ஆனால் இன்று வரை பலருக்கு அந்த பாடல் காட்சிகள் பெரும் கனவு என்பது பெரும் சோகம் .

சரி நிகழ்ச்சிக்கு வருவோம் காலம் கடந்து அதன் காட்சிகள் எதோ ஒருவகையில் மக்களை மகிழ்வித்துக்கொண்டும் இருக்கிறது என்றால் அது 'சூர்யவம்சம்' படம் போன்ற மிகச் சில படங்களால் மட்டுமே முடியும்.

குறிப்பாக இன்றும் , திருமணங்களில் மணமக்களை ஓரமான நிற்க வைத்துவிட்டு, நண்பர்கள் மணமக்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, 'ஏங்க சின்ராசு' என பேசும் வசனத்தை வைத்து வீடியோ இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

குறிப்பாக படத்தின்  ஒரு காட்சியில் காலம் எவ்வளவு வேகமா சுழலுது பாத்தீங்களா ?என தேவயானி பேசும் வசனம் ஹிட் அடித்தது. இது 90 ஸ் கிட்ஸ்களுக்கு பொருந்தி போனது.

 ஃப்ரெண்ட் பாயசம் சாப்டுங்க

அதே போல் இந்தாங்க ஃப்ரெண்ட் பாயசம் சாப்டுங்க என சக்திவேல் கவுண்டரிடம் அவரது பேரன் பாயாசம் கொடுக்கும் காட்சி, எப்போதும் சலிப்புத் தட்டாத வசனம் .

வாட்ஸ் அப்களின் ஸ்டிக்கர்களில் இருவரின் உரையாடல்களில் சுவைக் கூட்டுவதில் நிச்சயம் சூர்யவம்சம் படத்தின் வசன ஸ்டிக்கர்களுக்கு முக்கிய பங்குண்டு.

'பாயசம் சாப்டுங் ஃப்ரண்ட்' வசனத்தில் எக்கச்சக்கமான மீம்கள் உலா வருவதை காண முடியும். படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?' என்ற காட்சியின் வீடியோவாக டெம்பிளேட்டாக இணையத்தில் இப்போதும் உலா வருகின்றன.

அது மட்டும் அல்ல தந்தையர் தினத்தில் தன் தந்தை சக்திவேல் கவுண்டரை நினைத்து உருகி, மருகி, சின்ராசு பேசும் வசனம் தான் எல்லாரின் வாட்ஸ்அப் ஸ்டேடஸிலும் நிரம்பி வழிந்தது.

படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?

'உளி விழும்போது வளின்னு அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது. ஏர் உழும்போது கஷ்டம் நினைத்த எந்த நிலமும் விளைஞ்சு நிக்காது. அது மாதிரி தான் அப்பா கோவப்பட்றதையும், திட்றதையும் தப்பு நெனைக்கிற எந்த புள்ளையும் முன்னுக்கு வர முடியாது' என அவர் பேசும் வசனம் எப்போதும் கிளாஸிக்.

தந்தையர் தினத்தில் மகன்களின் அந்த ஸ்டேடஸ்களை பார்க்கும் அப்பாக்களெல்லாம் அந்தக் காட்சியில் ஆனந்தக் கண்ணீர்விடும் ராதிகாவைப்போல தங்களுக்கு அழுது கொண்டார்கள் எனக் கூறுகின்றது சில 90 கிட்ஸ்கள் நடத்திய களஆய்வு .

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

குறிப்பாக தேவையானி ஆசிர்வாதம் வாங்க பயன்படுத்தும் டெக்னிக்கை கண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் அன்று மிரண்டு போனார்கள். காதல் ஜோடிகளுக்கான வியூகத்தை வகுத்து கொடுத்த டெக்னிக் அது. இன்று அது மீம் டெம்ப்ளேட்டுகளாக மாறியிருக்கிறது.

படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?

அன்றாட வாழ்க்கையிலும் கூட, இவரு பெரிய தேவயானி... நான் சக்திவேல் கவுண்டரு. கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறாங்க' என புழக்கத்தில் வர காரணமே சூர்ய வம்சம் தான் .

அதேபோல முன்னேறத்துடிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது' பாடல் ஒரு எனர்ஜி டானிக்

இறுதிக் காட்சியில் ஆனந்த்ராஜின் கழுத்தைப் பிடித்து  சண்டை செய்யும் சரத்குமார் என்ர வம்சத்துல பொறந்தவங்களுக்கு விரோதிய கூட வாழ வைச்சுதான்டா பழக்கம்' எனப் பேசும் காட்சிகள்  இன்றும் மீம்ஸ்களாக சுற்றிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இதெல்லாம் நடக்கணும்னா நம்ம வாழ்க்கையிலும் ஒரு நந்தினி போல ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடுற(அந்த கதையில் வரும்தேவையாணி மாதிரி) பொண்ணு கிடைச்சா எல்லாருமே சின்ராசுதான் என  கூறும் 90 s kids களின் மனக்குரலே சூர்ய வம்சம்.

 இவ்வாறு பல ஞாபகங்களை  25 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா ரீல் ஃபார்மெட்டில் வெளியாகி பாட்டி காசில் முறுக்கு வாங்கி சுவைத்தபடி  டூரிங் டாக்சியில் பார்த்த  சூர்ய வம்சம்.

  விசிடி, டிவிடியாக பயணம் செய்து யூடியூப்களில் வலம் வந்து, தற்போது மீம்ஸ் இன்ஸ்டா ரீலாக ,மாறினாலும் , 90 ஸ் கிட்ஸ்களின் மறுக்க முடியாத காவியம் எனபதுதான் நிதர்சனமான உண்மை.

அப்புறம் சின்ராசு பாடும் ரோசாப்பூ பாடல் உங்களுக்கும் காதோரம் கேட்கிறதா?..