75 வயது நபருடன் காதல் - எல்லையில்லா இன்பத்தை தருவதாக 25 வயது காதலி நெகிழ்ச்சி!
25 வயது இளம்பெண், 75 வயது நபரை காதலித்து வருகிறார்.
காதலுக்கு வயதில்லை
அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியை சேர்ந்தவர் டயானா மொன்டானோ(25). இவர் தன்னை விட 51 வயது அதிகமான எட்கர்(76) என்பவரை காதலித்து வருகிறார்.
எட்கரின் முன்னாள் காதலி மூலமாக டயானா அவருக்கு அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் ஒரு வருடமாக டேட்டிங் செய்துள்ளனர். 2023ல் எட்கர் முதலில் காதலை கூறியுள்ளார். உடனே டயானா அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
உனக்கு 75 எனக்கு 25
ஆனால் இந்த காதலை டயானா குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தமாக டயானா அவருடன் பழகி வருகிறார். இவர்களது காதல் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், கமெண்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து டயானா கூறுகையில், வயது என்பது வெறும் எண் தான். நான் எட்கரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.
இதனால் எனது குடும்ப உறுப்பினர்கள் கோபம் அடைந்தாலும் பரவாயில்லை. அவர்கள் எனது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் எல்லையில்லா இன்பத்தை அளிக்கிறார் என தெரிவித்துள்ளார்.