ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாராயம் காய்ச்சிய 25 வயது இளைஞர் கைது..10 லிட்டர் சாராயம் பறிமுதல்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாராயம் காய்ச்சிய 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காமாட்சி நாடார் தெருவை சேர்ந்த கடற்கரை வயது 25. இவர் பெரியகுளம் கண்மாய் பகுதி அருகே ராஜ் என்பவர் தென்னந்தோப்பில் சாராயம் காய்ச்சி வருவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு காவல்துறையினர் தென்னந்தோப்பிற்கு விரைந்து சென்று பார்த்த போது கடற்கரை என்ற இளைஞர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவரிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்க்கு தேவையான மூலப் பொருட்கள்,சாரய ஊறல் 10 லிட்டர் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுவிலக்கு காவல் துறையினர் மம்சாபுரம் காவல் நிலையத்தில் சாராயம் காய்ச்சிய இளைஞர் கடற்கரை மீது வழக்கு பதிவு செய்த பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.