போலீஸாரின் தாய் துடிக்க துடிக்க கொலை - இளம்பெண் பகீர் வாக்குமூலம்
போலீஸ்காரர் தாயை தலையணையால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு சம்பவம்
தூத்துக்குடி, திருப்பனை பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா(70). ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளரான இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.
மகன், மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில், வசந்தா மட்டும் தனது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் காவலரான அவரது மகன் விக்ராந்த்துக்கு தகவல் அளித்ததில்,
உடனே விரைந்து வந்து பார்த்ததில், வீட்டின் உள்ளே வசந்தா மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாகக் கிடந்தார். அவரின் கழுத்தில் கிடந்த தங்க செயின் மற்றும் கம்மல்கள் காணாமல் போகியுள்ளது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,
இளம்பெண் கைது
வசந்தாவின் வீட்டருகே வசிக்கும் செல்வரதி எனும் 25 வயது பெண்தான் கொலை செய்தது என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்ததில், வசந்தா வீட்டில் உள்ள கோழி கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருடு போயுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு எலுமிச்சை பழங்கள் திருடுபோயுள்ளது. இளம்பெண் செல்வரதிதான் அந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்த வசந்தா அவரை கடுமையாக கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடு புகுந்து தலையணையால் வசந்தாவை அமுக்கி துடிதுடிக்க கொலை செய்தார். பின்னர் யாருக்கும் தன் சந்தேகம் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நகையை பறித்து, நகைக்காக நடந்த கொலையைப் போல திசை திருப்பி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.