25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை - நடந்தது என்ன? சோகத்தில் கிராமம்

Suicide 25-year-old-girl 45-year-old-person
By Nandhini Mar 30, 2022 04:37 AM GMT
Report

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், சந்தேமவத்தூரைச் மேகனா (25). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேகனாவிற்கு இளைஞர் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால், அந்த இளைஞர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் மேகனாவை விட்டு ஓடிவிட்டார்.

அந்த இளைஞரை மேகனா எங்கெல்லாம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மேனகா சிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த சங்கரண்ணா (45) என்பவருடன் நட்புடன் பழகி வந்தார்.

நாளடைவில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இவர்கள் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் எளிமையாக முறையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

ஆனால், தற்போது சங்கரண்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரண்ணாவின் தாய்க்கும், மேகனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. மேகனா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால், மேகனா, சங்கரண்ணாவிடம் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று கூறி வந்துள்ளார்.

தாயை விட்டு பிரிந்து வரமாட்டேன் என்று சங்கரண்ணா கூறியதால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

தினமும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்துக்கொண்டிருந்ததால், மனமுடைந்த சங்கரண்ணா நேற்று முன்தினம் அக்கிமிதிபாளையா என்ற கிராமத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தகவல் சங்கரண்ணாவின் தாயும், அவரது மனைவி மேகனாவும் தெரியவர, இருவரும் ஓடி வந்து சங்கரண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹிலியூர்துர்கா காவல் நிலையத்தில் சங்கரண்ணாவின் மரணத்திற்கு மேகனா தான் காரணம் என்று அவரது தாயார் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை - நடந்தது என்ன? சோகத்தில் கிராமம் | 25 Year Old Girl 45 Year Old Person Suicide