25 வயதில் உயர்நீதிமன்ற நீதிபதியாகும் தலித் பெண் - குவியும் பாராட்டு

Karnataka
By Sumathi Jan 19, 2023 04:31 AM GMT
Report

25 வயது இளம்பெண் ஒருவர் கர்நாடக உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக பதவியேற்கிறார்.

தலித் பெண்

இளம் வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகி இருக்கும் காயத்ரி, பங்காருபேட்டை அடுத்த காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் தான் பள்ளி படிப்பை முடித்துள்ளார்.

25 வயதில் உயர்நீதிமன்ற நீதிபதியாகும் தலித் பெண் - குவியும் பாராட்டு | 25 Year Old Dalit Woman Judge Of Karnataka Court

தொடர்ந்து, கெங்கல் அனுமந்தையா சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். பல்கலைக்கழக அளவில் 4வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நேரடி தேர்வு நடந்தது.

 நீதிபதி

அதில் பங்கேற்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், விரைவில் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த காயத்ரிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.