ஜூன் 30 ஆம் தேதி வரை தென்மாவட்ட ரயில்கள் ரத்து - பொதுமக்கள் அதிர்ச்சி

Southern railway Train cancelled
By Petchi Avudaiappan Jun 15, 2021 09:00 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஊரடங்கு காரணமாக போதிய பயணிகள் வருகை இல்லாததால் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

* புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது 

* கன்னியாகுமரி - புதுச்சேரி சிறப்பு ரயில் ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது 

* சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது 

* தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை ரத்து. 

* சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது 

* திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்ட்ரல் - மன்னார்குடி சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* மன்னார்குடி சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* மதுரை - புனலூர் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* புனலூர் - மதுரை சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை எழும்பூர் - கொல்லம் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.