உத்தரகாண்ட் மாநிலத்தில் கோர விபத்து : பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி

Uttarakhand
By Irumporai Oct 05, 2022 03:18 AM GMT
Report

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம், லால்தாங் பகுதியில் இருந்து நேற்றிரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

பிரோகல் பகுதியில் சிம்ரி என்ற இடத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கோர விபத்து : பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி | 25 People Dead In Uttarakhand Bus Accident

21 பேர் மீட்பு

தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 21 பேர் இரவோடு இரவாக உயிருடன் மீட்கப்பட்டதாக டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்