செஷல்ஸ் தீவில் தமிழக மீனவர்கள் 25 பேர் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேர் மற்றும் வடமாநில மீனவர்கள் 6 பேர் என மொத்தம் 25 மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது.
மேலும்,கன்னியாக்குமரியின் தூத்தூர்,பூத்துறையை சேர்ந்த நாயகம்,அந்தோணி என்பவர்களது இரண்டு படகுகளையும் செஷல்ஸ் நாட்டு கடற்படை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுவரை செஷல்ஸ் நாட்டு கடற்படையால் 5 விசைப்படகுகளுடன் 33 தமிழகம் மற்றும் 25 வடமாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம்,செஷல்ஸ் நாட்டு கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்
33 தமிழக மீனவர்களையும்,அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் நேற்று கடிதம் எழுதியிருந்தார்
இந்நிலையில்,எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேர் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.