நான் 25 ஹீரோயின்களை திருமணம் செய்துள்ளேன்... - அதிர்ச்சியை கிளப்பிய சத்யராஜ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 1980ம் ஆண்டு காலக்கட்டங்களில் ரஜினி, கமல் நடித்த காலக்கட்டங்களிலிருந்தே சத்யராஜுக்கும் தனி மவுசு அதிகளவில் இருந்து வருகிறது. இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், சிபி சத்யராஜ், நடிகை பூஜா ஹெக்டே, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசியதாவது -
நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்துள்ளேன். அதையெல்லாம் நான் என்னென்னு சொல்வது... நடிப்பை நடிப்பாகத்தான் பார்க்க வேண்டும். பிரபாஸின் அழகுக்காகவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸை நாங்கள் எல்லோரும் டார்லிங்ன்னு தான் அழைப்போம். பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு நிறைய பொறுப்பு வந்துள்ளது. இப்படம் மிக அழகான, அழுத்தமான காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.