25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்டும் – வானிலை மையம் அறிவிப்பு..!
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீடிக்கும் மழை
கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இது தவிர தென்மேற்கு பருவ மழை பெறும் மாவட்டங்களில் நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த நாட்களில் இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்து வருகிறது.
25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர் தேனி, தென்காசி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் சற்று கன மழை வரையிலும் மாலை ஆறு மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..