இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு - கோவாவில் நடந்தது என்ன?

Fire Death goa
By Karthikraja Dec 07, 2025 08:34 AM GMT
Report

கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவா இரவு விடுதி தீ விபத்து

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் 'பிர்ச் பை ரோமியோ லேன்' (Birch by Romeo Lane) என்ற இரவு கேளிக்கை விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. 

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு - கோவாவில் நடந்தது என்ன? | 25 Dies In Goa Night Club Fire Accident

நேற்று இரவு 12 மணியளவில் கேளிக்கை விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

நடனக் கலைஞர் ஒருவர் 'மெஹபூபா ஓ மெஹபூபா' பாடலுக்கு ஆடிக்கொண்டிருக்கும் போது தீ விபத்து ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 4 சுற்றுலா பயணிகள் மற்றும் 15 விடுதி ஊழியர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். 

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு - கோவாவில் நடந்தது என்ன? | 25 Dies In Goa Night Club Fire Accident

இதில் 3 பேர் மட்டும் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் மாநில முதல்வர் பிரமோத் சவந்த் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். 

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு - கோவாவில் நடந்தது என்ன? | 25 Dies In Goa Night Club Fire Accident

இது குறித்து பேசிய அவர், "முதற்கட்ட தகவலின் படி, சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இந்த தீ விபத்துக்கு இந்திய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.