25,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனம் ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!

Supreme Court of India West Bengal
By Sumathi May 08, 2024 04:20 AM GMT
Report

ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பணி நியமனம்

மேற்கு வங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித் துறை மூலம்25,753 பேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்.

supreme court of india

தொடர்ந்து இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. உடனே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி,பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர்அடங்கி அமர்வு முன்பாக வந்தது. அப்போது, அரசு வேலை மிகவும் அரிதானது. அதன் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கை பொய்த்துப் போனால் எதுவும் மிஞ்சாது.

தினக்கூலி பணியாளரின் மனைவி தேர்தலில் வெற்றி - ஏழைமக்களின் வெற்றியாக கிராமமே கொண்டாட்டம்!

தினக்கூலி பணியாளரின் மனைவி தேர்தலில் வெற்றி - ஏழைமக்களின் வெற்றியாக கிராமமே கொண்டாட்டம்!

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இது, அமைப்பு முறை சார்ந்த மோசடி. சமூக இயக்கத்துக்கு அரசு வேலைமிகவும் முக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதன் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர். அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தரவுகள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பராமரிக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள்.

west bengal

ஆனால், இப்போது அந்த தரவுகள் உங்களிடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு சேவை வழங்குபவரிடம் உள்ள தரவுகளை கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது உங்களின் கடமை. சிபிஐ விசாரித்து வரும் 8,000 ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பொருந்தும்.

மேலும், அவர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் எனக் கூறி 25,753 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.