மீண்டும் பரபரப்பு..! எட்டு மாநிலங்களில் PFI அமைப்பை சேர்ந்த 247 பேர் கைது

Gujarat Delhi Karnataka Assam Hyderabad
By Thahir Sep 27, 2022 11:15 AM GMT
Report

எட்டு மாநிலங்களில் 247 பாப்புல் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NIA அதிகாரிகள் சோதனை

கடந்த 22ம் தேதி இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மீண்டும் பரபரப்பு..! எட்டு மாநிலங்களில் PFI அமைப்பை சேர்ந்த 247 பேர் கைது | 247 Pfi Members Arrested

பின்னர் அவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாக கூறியும், முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதாகவும்,  தீவிரவாத அமைப்புகளில் சேர அவர்களை தீவிரப்படுத்துவதாகவும் PFI அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

247 பேர் கைது 

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு ஏஜென்சி வழங்கிய உளவுத்துறை அளித்த தகவலின் படி,

மீண்டும் பரபரப்பு..! எட்டு மாநிலங்களில் PFI அமைப்பை சேர்ந்த 247 பேர் கைது | 247 Pfi Members Arrested

மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து முதற்கட்ட தகவலின் படி டெல்லியில் 30 பேரும், கர்நாடகாவில் 40 பேரும், மத்திய பிரதேசத்தில் 21 பேரும், குஜராத்தில் 10 பேரும், அசாமில் 25 பேரும், ஆக மொத்தம் 247 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.