வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி மின்சாரம் உறுதி - மின்வாரிய தலைவர்
தமிழ சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், மே 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேர மின்சாரம் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் தேவைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அளித்துள்ள பேட்டியில், “வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்காக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சராசரியாக 18,000 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதிகபட்சமாக 21,000 யூனிட் மின்சாரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலையில் தேவைக்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில தொகுப்புகளில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. இதுதவிர தேவைப்பட்டால் தனியார் இடமும் வாங்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் தற்போதைய நிலையில் மின் தடை எங்கும் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.