கனவிதுதான் நிஜமிதுதான் ... சாரயம் குடித்துவிட்டு போதையில் முரட்டு தூக்கம்போட்ட யானைகள் : எங்கு தெரியுமா?
ஓடிசாவில் பழங்குடிகள் தயாரித்த சாராயத்தை யானைகள் குடித்துவிட்டு அங்கேயே படுத்துறங்கிய சம்பவம் இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது
சாரயம் குடித்த யானைகள்
ஓடிசாவில் கியோன் ஜர் மாவ்ட்டத்தில் பழங்குடிமக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் இலுப்பை பூ வினை பயன்படுத்தி சாராயம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனை காட்டில் ஒரு இடத்தில் பானையில் தண்ணீர் ஊற்றி அதில் இலுப்பை பூக்களை ஊற வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மறுநாளை காலை வந்து பார்த்தபோது பானைகள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு பக்கத்திலேயே 24 காட்டு யானைகள் முரட்டு தூக்கத்தில் இருந்துள்ளன.
ஒடிசாவில் விநோத சம்பவம்
அவர்கள் அவற்றை எழுப்ப முயன்றும் அவை எழுந்திருக்கவில்லை தனால் சாராயத்தை குடித்துவிட்டு யானைகள் தூங்கி கிடப்பதாக அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் மிகுந்த சிரமத்தின் பேரில் மத்தளம் அடித்து யானைகளை தூக்கத்திலிருந்து எழுப்பி அப்பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
ஆனால் வனத்துறையினர் யானைகள் அவற்றை குடிக்கவில்லையென்று கூறினாலும், யானைகள் அவற்றை குடித்துவிட்டுதான் பானைகளை உடைத்துவிட்டதாக கூறுகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.