80 வயது முதியவருடன் 23 வயது பெண்ணுக்கு திருணம் - முதியோர் இல்லத்தில் நடந்தது என்ன?
23 வயது இளம்பெண் ஒருவர் 80 வயது முதியவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். .
திருமணம்
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் லீ (80) என்பவர் வசித்து வருகிறார். இவர், அங்கு பணிபுரியும் சியாஃபங் (23) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில், அது காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்கு சியாஃபங் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், முதியவர் லீ மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சியாஃபங்,
காதலுக்கு வயதில்லை
தனக்கு குடும்பமே வேண்டாம் என்று கூறி, அவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பலரும் காதலுக்கு வயதில்லை என்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர், அந்த முதியவருக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்றும், அதனால் இளம்பெண் அவரை திருமணம் செய்திருக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.