23 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!

WhatsApp
By Thahir Dec 02, 2022 02:22 AM GMT
Report

கடந்த அக்டோபர் மாதம் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்-அப் நிறுவனம் முடக்கியுள்ளது.

வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம் 

செய்தி அனுப்பும் செயலிகளில் முதன்மை வகிக்கும் செயலியில் ஒன்று வாட்ஸ்-அப் தற்பொழுது ஆண்ட்ராய்டு உலகமாகி வரும் நிலையில், வாட்ஸ்-அப் செயலியானது அனைவரது மொபைல்களிலும் கட்டாயம் இருக்கும்.

இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் தனது பாதுகாப்பு அறிக்கையின் விதிகளை மீறியதற்காக சுமார் 23 லட்சத்திற்கு மேற்பட்ட பயனர்களின் தவறான வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளது.

23 lakh WhatsApp accounts are blocked..!

புதிய தொழிநுட்ப விதிக்கு உட்பட்டு கடந்த அக்டோபர் மாதம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு முடக்கப்பட்ட கணக்குகளில் இருந்து புகார்கள் ஏதும் வருவதற்கு முன்னதாகவே 8,11,000 கணக்குகள் முடக்கப்பட்டது.

மேலும் இந்த அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 701 புகார்களை பெற்றதாகவும் அதில் 34 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வாட்ஸ்-அப் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

புதிய ஐடி விதிகள் 2021-ன் (IT Rules 2021) படி, பயனர்களின் பாதுகாப்பிற்காக பல செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் என அனைத்து செயல்பாடுகளிலும் முதலீடு செய்து தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றோம் என்றும் இதே போல் பயனர்களின் பாதுகாப்பிலும் நாங்கள் முழு கவனிப்புடன் இருப்போம் எனவும் வாட்ஸ்-அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.