அந்த 22 மாவட்டமும் எச்சரிக்கையா இருங்கப்பா ..வார்னிங் கொடுக்கும் மத்தியரசு!

coronalockdown lockdownrelaxation Coronavaccine coronaindia
By Irumporai Jul 27, 2021 01:21 PM GMT
Report

இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ளது.

கொரோனாவினால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதாவது கடந்த 4 வாரமாக 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மூன்று மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா:

அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என்றும் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 54 மாவட்டங்களில் கொரோனா பரவல் சதவீதம் 10க்கும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.