கொரோனா 2வது அலையால் 2.27 கோடி பேர் வேலை இழப்பு - அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இரண்டு மாதங்களில் 2 கோடியே 27 லட்சம் பேர் வேலை இழந்தது தெரியவந்துள்ளது.
Centre For Monitoring Indian Economy எனப்படும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் நடத்திய ஆய்வில் கடந்த மே மாதத்தில் 11.9% ஆக இருந்த வேலையின்மை ஜூன் மாதத்தில் 9.17% ஆக குறைந்தது.
எனினும் ஏப்ரல் மாதத்தில் 7.97% ஆக இருந்த வேலையின்மையோடு ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது.
நகர்ப்புற வேலையின்மையை மட்டுமே கருத்தில் கொண்டால் மே மாதத்தில் 14.73%ஆக இருந்தது, ஜூன் மாதத்தில் 10.7% ஆக் குறைந்தது. கிராமப்புறங்களை பொறுத்தவரை மே மாதத்தில் 10.63% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதத்தில் 8.75% ஆக குறைந்திருக்கிறது.
மேலும் கடந்த ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கு பிறகு இவ்வாண்டு மே மாதத்தில்தான் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.