தமிழகத்தில் 2,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!

Covid 19 Tn government
By Petchi Avudaiappan Jul 17, 2021 01:32 PM GMT
Report

தமிழகத்தில் ஒரேநாளில் 2,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,33,323 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,695 ஆக உள்ளது.

மேலும் 2,802 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,71,038 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 241 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சாவூரில் 152 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.