கேரளாவை தொடர்ந்து திரிபுரா.. மீண்டும் உலுக்கிய நிலச்சரிவு - 22 பேர் உயிரிழப்பு!
திரிபுராவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
திரிபுரா
மும்பை, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் திரிபுரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை திரிபுராவில் பெய்த கனமழையால் சாந்திர்பஜார் ,அஸ்வனி, திரிபுரா,பாரா மற்றும் தேபிபூர் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது .
இதில் 12 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர்.இந்த நிலச்சரிவில் தற்பொழுது வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
நிலச்சரிவு
மேலும் திரிபுரா மாநிலம் முழுவதும் 2,032 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 450 நிவாரண முகாம்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு விமானம் மூலம் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில்
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.