உக்ரைனுக்கு 22 ஆயிரம் கோடி நிதியுதவி - உலக வங்கி அறிவிப்பு
உக்ரைனுக்கு உலக வங்கி 22 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 7வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் ஏராளாமான பொருள் சேதமும்,உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மீண்டு வர உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உலக வங்கி இந்த உதவியை வழங்குகிறது. உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்.
சர்வதேச நாணய நிதியதின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஆகியோர் இணைந்து அறிக்கை வாயிலாக நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைனில் போரினால் மனிதர்களுக்கு ஏற்படும் அழிவுகள் அதிர்ச்சியையும்,வருத்தததையும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மக்கள் சராசரி வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாகவும்,ஜுன் மாதத்திற்குள் இந்த நிதி முழுவதுமாக உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.