திருமணத்திற்கு முதல் நாளே புதுமண பெண் தூக்கிட்டு தற்கொலை - சோகத்தில் கிராமம்

marriage 21yodied diedbyhanging policeenquires
By Swetha Subash Apr 05, 2022 03:00 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

மன்னார்குடி அருகே திருமணத்திற்கு முதல் நாள் புதுமண பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நான்காம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் தேவதர்ஷினி (வயது 21). இவருக்கும் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் தேவதர்ஷினி தனது வீட்டில் இன்று காலை 7 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருமணத்திற்கு முதல் நாளே புதுமண பெண் தூக்கிட்டு தற்கொலை - சோகத்தில் கிராமம் | 21Yo Commits Suicide One Day Before Marriage

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தூக்கில் தொங்கிய தேவதர்ஷினியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவட இடத்திற்க்கு விரைந்து வந்து உயிரிழந்த தேவதர்ஷினியின் உடலை கைப்பற்றி பின்னர் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து கோட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் புதுமண பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.