‘மன்னிச்சிடும்மா எனக்கு வேற வழி தெரியல, நான் குளிக்கிறத ஒருத்தன் வீடியோ எடுத்து..." - கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

blackmail hanging sexualharassment studentdeath
By Swetha Subash Mar 31, 2022 12:19 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

'மன்னிச்சிடும்மா எனக்கு வேற வழி தெரியல, ஒருத்தன் நான் குளிக்கிறத வீடியோ எடுத்து பிளாக்மெயில் பண்றான்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்-விமலா தம்பதிக்கு  21 வயதில் அஜினாதேவி என்ற மகளும் அஜித் என்ற மகனும் உள்ளனர்.

அஜினாதேவி சிதம்பரம் அருகே வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார்.

‘மன்னிச்சிடும்மா எனக்கு வேற வழி தெரியல, நான் குளிக்கிறத ஒருத்தன் வீடியோ எடுத்து..." - கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை | 21 Yr Old Died By Hanging After Being Balckmailed

கடந்த 16-ந் தேதி விடுமுறைக்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த அஜினாதேவி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் அஜினாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார்.

மேலும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அஜினாதேவி, ‘மன்னிச்சிடு அம்மா எனக்கு வேற வழி தெரியல. ஒருத்தன் நான் குளிக்கிறதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான்.

அவன் கிட்ட இருந்து நான் தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல, என்னை மன்னித்துவிடு. தம்பியை நல்லா பார்த்துக்கோ. எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆசை. ஆனா என்ன பண்ண, கடவுள் என்னை வாழ விடல. எனக்கு வேற வழி இல்லை’ என உருக்கமாக எழுதியிருந்த கடிதம் போலீசார் விசரணையில் சிக்கியுள்ளது.

இதையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அஜினாதேவியின் செல்போனை சோதனை செய்தபோது, அதில் 3 எண்கள் அழைப்புகள் வராதவாறு பிளாக் செய்யப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.

தொடர்ந்து அந்த எண்கள் கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் யார்? என்பது குறித்தும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.