தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்ட பிரபல நடிகையின் உடல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மேற்கு வங்காளம்,கொல்கத்தா நகரின் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்தார் 21 வயதான பிதிஷா டி மஜும்தார் என்ற இளம் பெண்.
பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் வெளிவந்த பார்-தி கிளவுன் என்ற பெயரிடப்பட்ட குறும்படம் ஒன்றில் அனீர்பெட் சட்டோபாத்யாய் இயக்கத்தில் முதன்முறையாக பிதிஷா அறிமுக நடிகையானார். அந்த படத்தில் பிரபல நடிகர் தேப்ராஜ் முகர்ஜி நாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், பிதிஷா தனது குடியிருப்பில் மர்மமான முறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற பேரக்பூர் போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நடிகை தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனக்கு இறப்புக்கு யாரையும் காரணமாக குறிப்பிடவில்லை.
மேலும், பிதிஷாவுக்கு அனுபாப் பேரா என்ற காதலர் உள்ளதும் அவருடனான நட்புறவால் பிதிஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, கடந்த 15-ம் தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குள் கொல்கத்தாவில் பிரபல நடிகைகள் இருவர் உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.