குடும்பத்தினருக்கு பிடிக்காத வேலை - தங்கையை சுட்டு கொன்ற அண்ணன்; அப்படி என்ன வேலை செய்தார்?
குடும்பத்தினருக்கு பிடிக்காத துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை சகோதரரே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரெனாலா குர்ட் ஒகாரா பகுதியை சேர்ந்த ஸித்ரா என்ற 21 வயது பெண் மாடலிங் அழகி மற்றும் நடனக்கலைஞராக இருந்து வந்துள்ளார். ஆனால் ஸித்ரா இந்த தொழில் செய்வது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.
இது குறித்து ஸித்ராவிடம் வாதிட்டப்போதும் அவர் தனது முடிவில் உறிதியாக இருந்துள்ளார். ஆனாலும் இந்த துறையில் இருப்பது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது, இதனால் இந்த துறையில் இருந்து விலக வேண்டும் என குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
எதற்கும் செவிசாய்க்காமல் தனக்கு விருப்பப்பட்ட துறையில் செயல்பட்டு வந்துள்ளார் ஸித்ரா. இந்நிலையில் பொது இடத்தில் சித்ரா நடனமாடும் வீடியோவை உறவுக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு அதனை சித்ராவின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த ஹம்சா ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுப் வீட்டுக்கு வந்த ஸித்ராவிடம் நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக கைவிட வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஹம்சா ஸித்ராவை தாக்கி, கோபம் முற்றி துப்பாக்கி எடுத்து சித்ராவை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சித்ரா பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் ஹம்சாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் குடும்பத்தினருக்கு பிடிக்காத வேளையை ஸித்ரா தொடர்ந்து செய்து வந்ததால் கோபமடைந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், அதுவும் குறிப்பாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் சமீப காலங்களில் அதிக அளவில் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.