52 வயது பெண்ணுடன் காதலில் விழுந்த 21 வயது இளைஞன் - காதலுக்கு வயதில்லையாம்..
21வயது இளைஞன், 52 வயது பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
31 வயது மூப்பு
சமூக வலைதளங்களில் திருமண வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இருவர் கழுத்தில் மாலையுடன் நிற்கின்றனர். உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா என்று ஒருவர் பையனிடம் கேட்கையில், அப்போது சிறுவன் ஆம் என்று பதிலளித்தான்.

அவரிடம் வயது கேட்க, அவருக்கு 21 வயது என்றும், தான் திருமணம் செய்த பெண்ணுக்கு 52 வயது என்றும் கூறியுள்ளார். அப்போது எதிரில் நின்றவர்கள் அண்ணா, நீங்கள் செய்தது சரியா என்று கேட்கையில், அதற்கு சிறுவன், 'காதலுக்கு வயதில்லை; வயது பார்த்து காதல் வருவதில்லை'.
வீடியோ வைரல்
காதல் உணர்வு என்பது எப்போது வேண்டுமானாலும், யாரை பார்த்தாலும் எழலாம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, இந்த திருமணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு அந்த பெண்,
ஆம், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் என்னை விட அவரை அதிகமாக நம்புகிறேன். ஏனென்றால் நான் இவனுடன் மூன்று வருடங்கள் பழகி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.