சுருண்டு விழுந்த இளம் ஆஸி., கிரிக்கெட் வீரர் - பந்தால் பறிபோன உயிர்!
பந்து தாக்கியதில் இளம் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்கிய பந்து
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

அங்கு உள்ளூர் போட்டிகளும் அங்கு நடந்து வருகிறது. தொடர்ந்து மெல்போர்னில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப்பின் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் நெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இளம் வீரர் பலி
பந்துவீசும் இயந்திரத்தை வைத்து அவர் பேட்டிங் பயிற்சி எடுத்து வந்தார். அப்போது அந்த இயந்திரம் வீசிய ஒரு பந்து தலை மற்றும் கழுத்துப் பகுதியைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப் வெளியிட்ட அறிக்கையில்,
"பென் ஆஸ்டின் மறைவு எங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இழப்பு இழப்பு கிரிக்கெட் சமூகத்தில் அனைவராலும் உணரப்படும். அவர் நிஜமாகவே ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சிறந்த ஆல் ரவுண்டர் மற்றும் அற்புதமான இளைஞன்" என்று புகழாரம் சூட்டியுள்ளது.