சுக்குநூறாய் நொறுங்கிய பள்ளி வேன் - 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் பலி!
பள்ளி வேன், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி வேன் விபத்து
தென் ஆப்பிரிக்கா, கிழக்கு பகுதியில் குவாசுலு-நடால் மாகாணத்தின் பொங்கோலா நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளியில் வகுப்புகள் முடிந்து பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

வேனில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என 21 பேர் இருந்தனர். இந்நிலையில், பொங்கலோ நகரில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரில்
21 பேர் பலி
அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி ஒன்று பள்ளி வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், பள்ளி வேன் சுக்குநூறாய் நொறுங்கியது. இந்த கோர விபத்தில், வேனில் இருந்த 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும்

உதவியாளர் என 21 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.