100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Sri Lanka Accident Death
By Sumathi May 11, 2025 08:11 AM GMT
Report

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து விபத்து 

இலங்கை, கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. அப்போது நுவரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருக்கையில்,

srilanka

பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்; அலறும் சைரன் - எச்சரிக்கை

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்; அலறும் சைரன் - எச்சரிக்கை

21 பேர் பலி

இதில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் புத்த மத துறவிகள்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் சம்பவ இடத்திலேயே பலி | 21 Killed In Sri Lanka Bus Accident

20 பேர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள பேருந்தில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இலங்கையில் இன்று நடைபெற்றுள்ள இந்த விபத்துதான் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.