ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடுஅரசு உத்தரவு
தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளில் 21 ஐபிஎஸ் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து பல அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு , இட மாற்றம் நடந்து வருகிறது, அந்த வகையில் தற்போது 1 ஐபிஎஸ் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது
சிலை கடத்தல் பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் புதியதாக நியமிக்கப்பட்டது உட்பட 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்பியாக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்பியாக இருந்த செந்தில் குமார் சென்னையில் அமலாக்கத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுளளார்.
கருணாசாகர் ஐபிஎஸ் கூடுதல் ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை துணை ஆணையராக இருந்த வனிதா சென்னையில் பெண்கள்குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.