பஸ் - டிரக் மோதி கோர விபத்து - 21 பேர் உயிரிழப்பு

Mexico Accident Death
By Sumathi May 15, 2025 07:21 AM GMT
Report

பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஸ்-டிரக் விபத்து

மத்திய மெக்சிகோவின் பூப்லா - ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த டிரக் வேன் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.

mexico accident

அப்போது, பேருந்து ஒன்றின் மீது மோதி டிரக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் சம்பவ இடத்திலேயே பலி

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் சம்பவ இடத்திலேயே பலி

21 பேர் பலி

மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவது, டிரைவரின் சோர்வு காரணமாக சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவது கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

பஸ் - டிரக் மோதி கோர விபத்து - 21 பேர் உயிரிழப்பு | 21 Died In Bus Truck Collision In Mexico

இந்த ஆண்டில் மட்டுமே காம்பேச் மற்றும் பிற பகுதிகளில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 60 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.