தமிழ்நாடு : வெற்றி பெற்ற 21 மாநகராட்சி மேயர்களின் விவரம்
தமிழகத்தில் கடந்த பிப்பரவரி 19-ந் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,
சென்னை திருவிக நகர் 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரியா சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரமன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்னை சோழராஜன் போட்டியின்றி தேர்வு செய்யபட்டார்.
கோவை மாநகரின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்வு.
திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுகவின் ஜெகன் போட்டியின்றி தேர்வு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விசிகவை சேர்ந்த சுமதி போட்டியின்றி தேர்வானார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி.
மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார்.
ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார் போட்டியின்றி தேர்வு.
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி.
சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் இராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வானார்.
கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி.
திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவின் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வானார்.
சிவகாசி மாநகராட்சி மேயரானார் சங்கீதா இன்பம்.
ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி.
ஈரோடு மேயராக நாகரத்தினம் தேர்வானார்.
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி வெற்றி பெற்றார்.
கும்பகோணம் மேயராக சரவணன் தேர்வாகியுள்ளார் .