தொடர்ந்து சரியும் தங்கம் விலை! 10 நாட்களில் சவரனுக்கு ரூ.13,600 குறைவு!
Gold Price Today: இன்று (நவம்பர் 20) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.குறிப்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.13,600 குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கக் காத்திருப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
22 காரட் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.11,980-க்கும், ஒரு சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்பட்ட 22 காரட் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510 ஆகவும், சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.385 குறைந்து ரூ.9,420 ஆகவும், சவரனுக்கு ரூ.3,080 குறைந்து ரூ.75,360 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை

வெள்ளியின் விலை தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.175 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,75,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.