இன்று மட்டும் 20 பேர்: தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மதுரை,நெல்லை,கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் நாகை, திருப்பத்தூர், விழுப்புரம், கோவை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராகவும், விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண்துறை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டடுள்ளார்.
அதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும், திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.