2028-ஒலிம்பிக்ல கிரிக்கெட்? ஐசிசி தீவிரம்!!

cricket icc 2028olympic
By Irumporai Aug 11, 2021 12:18 AM GMT
Report

2028 ல் அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டினையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்   2028-ம் ஆண்டு 34-வது ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டினையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறியதாவது, கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. குறிப்பாக தெற்கு ஆசியாவில் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். .இதனால் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும் என கூறினார்.

அதே சமயம் கிரிக்கெட்டினை ஒலிம்பிக்கில் சேர்ப்பது எளிதான காரியமில்லை எனவும் அதே சமயம்  கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில்  சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும் என கூறியுள்ளார் ஐசிசி யின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.