மீண்டும் முதல்வராவார் ஸ்டாலின்; விஜய்யின் நிலை? கருத்து கணிப்பு வெளியீடு
ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என கருத்து கணிப்பு மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து கணிப்பு
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணியை, கடந்த பிப்., 5ம் தேதி துவங்கினர்.

இந்த கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, ஜூன் மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய முடிவுகளின்படி, 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் எனவும்,
மீண்டும் ஸ்டாலின்
அடுத்து, 73.30 சதவீதம் பேர் பழனிசாமிக்கும் 60.58 சதவீதம் பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய அரசியல் சூழலில் மீண்டும் கருத்துக்கணிப்பு நடைபெற்ற நிலையில், ஸ்டாலினே மீண்டும் முதல்வராவார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி, தவெக தலைவர் விஜய் 2ம் இடம் பிடிப்பார். விஜய் வருகையால் சீமானுக்கு பாதிப்பு இல்லை' என கூறப்பட்டுள்ளது.