சென்னை மக்கள் யார் பக்கம்? திமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்- IBC தமிழ் கருத்துக்கணிப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை ஆகிய விடயங்களில் தீவிரம் காட்டி வருகிறது.
தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சென்னையில் எந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது என IBC தமிழ் துக்ளக் இந்தியாவுடன் கருத்துக் கணிப்பு மேற்கொண்டுள்ளது.
ஆண்கள், பெண்கள், நகர்ப்புறம், கிராமப்பகுதிகள், 18 - 30 வயது உள்ள இளம் தலைமுறையினர், 30 - 60 வயதுள்ள நடுத்தர வயதினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், பாலின, நகர/கிராம, வயது வாரியாக எந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் விரிவாக வீடியோவில் விவாதிக்கப்பட்டுள்ளது.