2026ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு
இந்தியாவில் மருத்துவ இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) படிப்புகளில் சேர நீட் (NEET) நுழைவுத் தேர்வு கட்டாயம்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி AIIMS, JIPMER ஆகியவற்றிலும் சேர நீட் அவசியம்.
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கும் நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. இளநிலைக்கு NEET-UG, முதுநிலைக்கு NEET-PG தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான NEET-UG தேர்வு மே 3ஆம் திகதி நடைபெறும் என NTA அறிவித்துள்ளது.

இந்த தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
மேலும், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று முதல் மார்ச் 8 வரை www.neet.nta.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.