2026 மார்ச் 3க்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

Horoscope Astrology Sani Bhagavan
By Sakthi Raj Feb 12, 2026 10:08 AM GMT
Report

 ஜோதிடத்தில் சனி மற்றும் சுக்கிர இணைவு ஒரு மிகப்பெரிய ராஜயோகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி அதாவது ஹோலி பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக சுக்கிர பகவான் மீன ராசிக்கு கும்ப ராசியில் இருந்து இடம் மாறுகிறார்.

மீன ராசியில் ஏற்கனவே சனிபகவான் இருக்கிறார். ஆதலால் இந்த சுக்கிரன் மற்றும் சனி பகவானுடைய இணைவானது 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்து ஒரு சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை வழங்குகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 மார்ச் 3க்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் | 2026 March Sukiran Sani Brings Luck To This Zodiac

சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. இவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுப்பாராம்

சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. இவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுப்பாராம்

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை திடீர் ராஜயோகத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் எல்லாம் எந்த ஒரு தாமதம் தடையும் இல்லாமல் நடக்கப்போகிறது.

குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கை துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான நேரத்தை செலவிட கூடிய அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது.

துலாம்:

துலாம் ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிர பகவானுடைய சேர்க்கையானது திடீர் பொன் பொருள் வாங்கக்கூடிய யோகத்தை கொடுக்கப் போகிறது. ஆடம்பர பொருட்கள் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் வந்து சேரும்.

மனதிற்கு பிடித்த விஷயங்களை எல்லாம் செய்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் நல்ல மாற்றம் கிடைக்கும். நீண்ட நாள் கடனை அடைக்க கூடிய யோகம் உண்டாகும்.

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.. கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.. கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்

கும்பம்:

கும்ப ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரன் சேர்கையானது இவர்களுக்கு திருமண வாழ்க்கையை கொடுக்கப் போகிறார் . புதிய வீடு மற்றும் வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும் அதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

நண்பர்கள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். நீண்ட நாட்கள் வேலையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.