குரு பகவானால் எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா?

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil
By Sakthi Raj Feb 04, 2026 06:26 AM GMT
Report

 ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு சுமார் 13 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்த குரு பெயர்ச்சியானது நிச்சயம் தனிநபர் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டு செய்யும்.

தற்பொழுது குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால் ஹோலி பண்டிகைக்கு பிறகு அதாவது மார்ச் 13ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து பயணம் செய்ய இருக்கிறார். குருவின் நேரடி கிரக பயணம் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது.

இதனால் அவர்களுக்கு எதிர்பார்த்த எல்லா காரியங்களும் கைகூடி வர இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினருக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியால் நன்மை காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

குரு பகவானால் எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா? | 2026 March Guru Peyarchi Bring Luck To This Zodiac

2026 பிப்ரவரி மாத பலன்கள்: இந்த மாதம் ஜாக்பாட் அடிக்க போகும் 4 முக்கிய ராசிகள்

2026 பிப்ரவரி மாத பலன்கள்: இந்த மாதம் ஜாக்பாட் அடிக்க போகும் 4 முக்கிய ராசிகள்

துலாம்:

துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டமானது தொட்டதெல்லாம் பொன்னாக கூடிய அமைப்பு உண்டாகும். இவர்களுக்கு வேலை செய்யும் இடங்களிலும் குடும்பத்திலும் எல்லாம் சாதகமாகவே அமையப் போகிறது.

வழக்கு விஷயங்கள் எதிர்பார்த்த விதமாக இவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போகிறது. வேலை தொடர்பாக நீங்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நினைத்த இடத்தில் நினைத்த சம்பளத்துடன் நீங்கள் வேலையில் அமரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கப் போகிறார்.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு இந்த காலகட்டம் தலைநிமிர்ந்து நடக்கக் கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாக அமையப்போகிறது. கேலி கிண்டல் செய்தவர்களும் முன்னிலையில் மிகச் சிறப்பாக வாழக்கூடிய காலகட்டமாக இருக்கிறது.

நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது. வெளிநாட்டு தொடர்பான வேலை உங்களுக்கு இந்த காலகட்டங்களில் கிடைக்கும். பொன் பொருள் என்று ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

360 ஆண்டுகளுக்கு மேல் பழனி கோவிலில் இவர்களுக்கே முன்னுரிமை.. யார் தெரியுமா?

360 ஆண்டுகளுக்கு மேல் பழனி கோவிலில் இவர்களுக்கே முன்னுரிமை.. யார் தெரியுமா?

மீனம்:

மீன ராசியினருக்கு இந்த காலகட்டமானது இவர்களுக்கு குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை கொடுக்கப் போகிறது. பூர்வீக தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட போகிறீர்கள்.

இறை வழிபாடுகளில் மனம் ஈடுபடும். நீங்கள் கேட்காமல் தொலைதூரத்தில் இருந்தும் உங்களுக்கு உதவிகள் தக்க சமயத்தில் வந்து சேரும். திரும்பும் திசை எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே அமையக்கூடிய பொன்னான காலமாக இருக்கிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.