12 ஆண்டுகளுக்கு பிறகு குருவால் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்
குருபகவான் 13 மாதங்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றமானது நிச்சயம் 12 ராசிகளுக்கும் ஒரு வித தாக்கம் உண்டு செய்யும். குரு பகவான் தற்பொழுது வக்கிர இயக்கத்தில் இருக்கிறார். மார்ச் 13 அன்று ஹோலி பண்டிகைக்கு பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து நேரடியாக பயணம் செல்ல உள்ளார்.
குருவின் இந்த நேரடி வக்கிர நிவர்த்தியானது ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது திரும்பும் திசைகள் எல்லாம் அதிர்ஷ்டமாகவே இருக்கப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

துலாம்:
துலாம் குரு பகவான் உடைய இந்த நேரடி பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. இந்த நேரத்தில் இவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் எளிமையாக கைகூடி வரக்கூடிய காலம் ஆகும். வேலைப்பளு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்தி கொண்டு இருந்தால் நிச்சயம் அங்கீகாரம் பெறக்கூடிய காலகட்டமாகும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு குரு வக்கிர நிவர்த்தி ஆனது மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று மருத்துவம் சார்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இயற்கையாகவே கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் கைக்கூடி வரப்போகிறது. எதிர்பார்த்த பொருளாதார நிலைத்த இடத்தில் இருந்து பெற போகிறீர்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு வக்கிர நிவர்த்தி இவர்களுக்கு இழந்ததை மீட்டு கொடுக்க போகிறது. இந்த கால கட்டங்களில் புதிய வண்டி வாகனம் வாங்கும் உண்டாகும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு நல்ல முடிவை பெறும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதுமட்டுமல்லாமல் அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.