உலகமே 2026-ல்.. ஆனால் இந்த நாடு மட்டும் 2018-ல் - பின்னணி என்ன?
ஒரே ஒரு நாடு மட்டும் இன்னும் 2018லேயே உள்ளது.
எத்தியோப்பியா
உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே சர்வதேச கிரிகோரியன் காலெண்டரை பயன்படுத்தும் நிலையில்,

எத்தியோப்பியாவில் மட்டும் கிரிகோரியன் நாட்காட்டிக்குப் பதிலாக, கெயஸ் (Geʽez) என்ற தனித்துவமான காலண்டர் பின்பற்றப்படுகிறது.
இதன் காரணமாகவே அங்கு மட்டும் இப்போது 2018 தான் ஆகிறது. இது ஒரு சூரிய நாட்காட்டி. கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. கிரகோரியன் நாட்காட்டியில் 12 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த பெயஸ் காலெண்டரில் 13 மாதங்கள் உண்டு.
கெயஸ் காலண்டர்
அதில் 12 மாதங்கள் தலா 30 நாட்களையும், பாக்கும் (Pagume) எனப்படும் 13வது மாதம் 5 நாட்களையும் (லீப் வருடங்களில் 6 நாட்கள்) கொண்டிருக்கும். மேலும், எத்தியோப்பியாவின் புத்தாண்டு ஜனவரியில் இல்லாமல் செப்டம்பரில் தொடங்குகிறது.

அங்கு நீதிமன்றங்கள், பள்ளிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அன்றாட ஆவணங்களில் என அனைத்திலும் அதிகாரப்பூர்வமாக இந்த தேதிகளே பயன்படுத்தப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஆண்டு என்ன என்பதை வைத்துக் கணக்கிடப்படும் முறையின் காரணமாகவே இந்த 7-8 ஆண்டு இடைவெளி உருவாகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.