2026-ன் முதல் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிகளுக்கு கட்டாயம் இது நடக்குமாம்
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று முதல் சூரிய கிரகணம் நடக்கிறது. இது பிற்பகல் 3. 26 மணி முதல் மறுநாள் காலை 7.57 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் சுக்கிரன், ராகு, புதன் ஆகியவை கும்பத்தில் இருக்கிறார்கள்.
இவை மிகப்பெரிய யோகம் உருவாக இருக்கிறது. அதாவது சூரியன் புதன் சேர்க்கையால் புதாத்திய யோகமும் செவ்வாய் சந்திரன் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகமும் லட்சுமி நாராயணன் யோகமும் உருவாகிறது. இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப் பெரிய அளவில் நன்மையை செய்ய காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த யோகமானது இவர்களுக்கு திடீர் பொருளாதார வளர்ச்சியை கொடுக்க காத்திருக்கிறது. நீங்கள் குடும்பத்தில் சந்தித்து வந்த சிறு சிறு பிரச்சனைகளும் விலகப் போகிறது. கணவன் உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருப்பார். வேலை தொடர்பாக செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். பதவி உயர்வு நீங்கள் எதிர்பார்த்தது போல் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த யோகமானது வழக்கு விஷயங்களில் சாதகமாக அமையப் போகிறது. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உறவினர்கள் வழியே நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் விலகும். சமுதாயத்தை உங்களுக்கு என்று ஒரு தனி மரியாதை உயரக்கூடிய காலம். பிள்ளைகளால் நன்மையும் பெருமையும் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இந்த கால கட்டம் தொழில் ரீதியாக நிறைய புதிய வாய்ப்புகள் தேடி வர போகிறது. உங்கள் சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு நல்ல காலகட்டம். எதிர்பாராத பண வரமும் அதிர்ஷ்டமும் உங்களுக்கு காத்திருக்கிறது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan