உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.. கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட சில நேரத்தில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகத்தால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை சேர போகிறது.
அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம். அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி அன்று சந்திர பகவான் மகர ராசியில் நுழைய இருக்கிறார். அங்கு ஏற்கனவே செவ்வாய் பகவான் உள்ளார். மகர ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடக்க இருப்பதால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
செவ்வாய் பகவான் 18 மாதங்களுக்குப் பிறகு மகர ராசியில் நுழைகிறார். இதனால் மகர ராசியில் செவ்வாய் சந்திரன் சேர்க்கை ஒரு சில ராசிகளுக்கு செல்வம், புகழ் அனைத்தையும் பெற்றுக் கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மகரம்:
இந்த மகாலட்சுமி ராஜயோகமானது இவர்களுக்கு அதிர்ஷ்டம் மேல அதிர்ஷ்டம் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நினைத்த காரியங்களை தடையின்றி நீங்கள் செய்யப் போகிறீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு துணிச்சல் தன்னம்பிக்கை அதிகமாக போகிறது. தொழில் ரீதியாக நீங்கள் நினைத்த வெற்றியும் வருமானத்தையும் பெற போகிறீர்கள். பணியிடங்களில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க போகிறது.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த மகாலட்சுமி ராஜயோகம் ஆனது இவர்களுக்கு நினைத்த காரியத்தை முடித்து கொடுக்கப் போகிறது. இந்த காலகட்டங்களில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழப் போகிறீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் தடை இன்றி நடக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு பாராட்டுகளையும் பெறுவீர்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் மற்றும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த மகாலட்சுமி ராஜ யோகம் ஆனது தொழில் ரீதியாக புதிய நண்பர்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள். அரசு வேலையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நல்ல மதிப்பு கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சொத்து பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறப்போகிறீர்கள். உடன் பிறந்தவர்களிடம் நல்ல அன்பும் ஆறுதலும் கிடைக்கும். நகை, வீடு, வாகனம் வாங்கக்கூடிய அத்தனை யோகமும் பெறுவீர்கள்.