சுக்கிரன் குருவால் உருவாகும் யோகம்.. ராஜவாழ்க்கை வாழ போகும் ராசிகள்

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Sakthi Raj Feb 05, 2026 01:30 PM GMT
Report

  ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் குரு பகவான் இருவருமே மிகவும் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார்கள். இவர்களுடைய ஒவ்வொரு மாற்றமும் 12 ராசிகளுக்கும் உலக அளவில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை முடிவு செய்யும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைய இருக்கிறார். குரு பகவான் ஏற்கனவே மிதுன ராசியில் இருக்கிறார். இந்த நிலையில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை குறிப்பிட்ட ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் ராஜயோகத்தை கொடுக்க இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சுக்கிரன் குருவால் உருவாகும் யோகம்.. ராஜவாழ்க்கை வாழ போகும் ராசிகள் | 2026 Feb Sukiran Guru Serkai Prediction

குரு பகவானால் எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா?

குரு பகவானால் எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா?

மிதுனம்:

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசியினருக்கு ஒரு மிகப்பெரிய அளவில் ராஜ வாழ்க்கையை கொடுக்க போகிறது. இவர்கள் பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் விலகப் போகிறது. எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

சிம்மம்:

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை சிம்ம ராசியினருக்கு வியாபார ரீதியாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கப்படுகிறது. எதையும் தீர ஆராய்ந்து செயல்படக்கூடிய தன்மையை பெறப்போகிறீர்கள். நீண்ட நாட்களாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகப் போகிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

2026 பிப்ரவரி மாத பலன்கள்: இந்த மாதம் ஜாக்பாட் அடிக்க போகும் 4 முக்கிய ராசிகள்

2026 பிப்ரவரி மாத பலன்கள்: இந்த மாதம் ஜாக்பாட் அடிக்க போகும் 4 முக்கிய ராசிகள்

துலாம்:

துலாம் ராசிக்கு குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை இவர்களுக்கு படிப்பில் ஒரு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். பொருளாதாரம் மேம்படும் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.